Editorial / 2026 பெப்ரவரி 13 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்
திருகோணமலை , கந்தளாய், வான் எல விகாரை காட்டுப்பகுதியில் தாயிடமிருந்து பிரிந்து தனியாக தவித்துக் கொண்டிருந்த சுமார் மூன்று வயதுடைய யானைக்குட்டி ஒன்று வியாழக்கிழமை (12) அன்று வனவிலங்கு அதிகாரிகளால் மீட்கப்பட்டு மேலதிக பராமரிப்புக்காக கொண்டு செல்லப்பட்டது.
வான் எல விகாரை காட்டுப்பகுதியில் யானைக்குட்டி ஒன்று தனியாக நின்றிருந்ததை அவதானித்த பொதுமக்கள், அது குறித்து கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கினர். இதையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள், கடந்த மூன்று நாட்களாக அந்தக் குட்டி யானையை அதன் தாயுடன் அல்லது யானை கூட்டத்துடன் சேர்த்து வைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
வனவிலங்கு அதிகாரிகள் இரவு பகலாகக் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு, குட்டி யானையை தாயிடம் சேர்க்க முயன்ற போதிலும், இந்தப் பகுதிக்கு யானைக் கூட்டங்கள் எவையும் வராத காரணத்தினால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. குட்டி யானை காட்டில் தனியாக இருந்தால் மற்ற விலங்குகளால் ஆபத்து ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு அதிகாரிகள் அதனை மீட்கத் தீர்மானித்தனர்.
மீட்கப்பட்ட இந்த மூன்று வயது யானைக்குட்டி, முறையான சிகிச்சை மற்றும் மேலதிக பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக கிரிதலே வனவிலங்கு கால்நடை மருத்துவப் பிரிவிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. அங்கு கால்நடை மருத்துவர்களின் கண்காணிப்பில் யானைக்குட்டிக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களும் மருத்துவ வசதிகளும் வழங்கப்படவுள்ளன.
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026