2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

’R.K-நகர்’

George   / 2017 மே 29 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் வெங்கட்பிரபுவின் “பிளக் டிக்கெட் கம்பனி” தயாரிக்கவுள்ள அடுத்தத் திரைப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் தகவல்கள், வேட்பாளர் பட்டியல் போன்று கடந்த மூன்று நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும்போதே, இது ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட திரைப்படமாகத்தான் இருக்கும் என்று ஊகிக்கப்பட்டது.

இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், நாயகன், நாயகி உள்பட பல தகவல்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தத் திரைப்படத்தின் தலைப்பை வெங்கட்பிரபு அறிவித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்துக்கு “R.K-நகர்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான இந்த தொகுதியில், அண்மையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் இரத்துச் செய்யப்பட்டது உங்களுக்க நினைவிருக்கலாம்.

வைபவ், சனா, சம்பத் உள்ளிட்டவர்கள் நடிக்கவுள்ள இந்தத் திரைப்படத்தை சரவணன் ராஜன் இயக்குகிறார்.  பிரேம்ஜி இசையமைக்க, ஒளிப்பதிவாளர் எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கின்றார். படத்தொகுப்பு வேலைகளை பிரவீண் கே.எல் பார்த்துக்கொள்கின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .