2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

அண்ணனின் பூதவுடலை ஆரத்தி எடுத்து பெற்றுக் கொண்ட தங்கை

Freelancer   / 2024 மார்ச் 03 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாந்தனின் பூதவுடல் அவரின் சொந்த ஊரான உடுப்பிடியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சாந்தனின் உடலை வீட்டிற்கு கொண்டுவரும் போது, அவரது உடன்பிறந்த சகோதரி ஆரத்தி எடுத்தமை அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்திருந்தது.

“என் தெய்வம் வீட்டிற்கு வருகின்றது, யாரும் அழக் கூடாது“ என அவரது சகோதரி இதன்போது உருக்கத்துடன் கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்தோடு தன் மகனை உயிருடன் பார்க்க வேண்டும் என்று காத்திருந்த தாய் பல ஆண்டுகளுக்கு பின் உயிரற்ற உடலை கண்டு கதறி அழுதார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X