2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

இடிதாங்கி கொள்ளை; நால்வர் கைது

Editorial   / 2017 ஜூன் 01 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கறுவாத்தோட்டம், பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள கோடீஸ்வரர் வீட்டில் இருந்த, 300 ஆண்டுகள் ​பழமையான இடிதாங்கியை கொள்ளையடித்துச் சென்றனர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், நான்குபேரை கைது செய்துள்ளதாக, கொழும்பு தெற்கு பிரிவின் சட்டத்தை வலுவூட்டுவதற்கான பிரிவு அறிவித்துள்ளது.  

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களில் மற்றையவர் பொலிஸ் அதிகாரி என்றும் அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடி ​வலைவிரித்துள்ளதாகவும் அப்பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.  

கோடீஸ்வரர், இந்த இடிதாங்கியை 140 மில்லியன் ரூபாய்க்கு (14 கோடி) விற்று தருமாறு, நீர்கொழும்பில் உள்ள கலைப்பொருள் விற்பனை நிலையத்தின் உரிமையாளரிடம் இதற்கு முன்னர் கேட்டுள்ளார்.  

சந்தேகநபர்கள், அது தொடர்பில் அறிந்து வைத்துகொண்டு, இடிதாங்கியை விலைக்கு வாங்கவரும் பாவனையில், அதனைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .