2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

எச்.ஐ.வி தொற்று: 160 பேர் பாதிப்பு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வருட ஜனவரி மாதத்தில் இருந்து ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் சுமார் 160 பேர் எச்.ஐ.வி தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

25 தொடக்கம் 45 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகளவில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாவதாக பால்வினை நோய்கள் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டாக்டெர். சிசிர லியனகே தெரிவித்தார். 

சுற்றுலாத்துறை, போதைப்பொருள் பாவனை, ஓரினச்சேர்க்கை மற்றும் குடிவரவு ஆகியவையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கு காரணிகளாக அமைந்துள்ளன என சுகாதார அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. 

கடந்த 2014ஆம் ஆண்டு, 228 பேர், எச்.ஐ.வி தொற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .