2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

ஓய்வூதியம் பெறுவோருக்கு இரட்டை கொடுப்பனவு

Editorial   / 2024 ஜூலை 09 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதிவு செய்யப்பட்ட 708,231 ஓய்வூதியம் பெறுவோருக்கு ஜூலை 10ஆம் திகதி செலுத்தப்பட வேண்டிய 28.5 பில்லியன் ரூபாய் ஓய்வூதியம் இன்று (09) வங்கிகளில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டி. டயஸ் தெரிவித்தார்.

இதன்படி சுமார் 99.5% ஓய்வூதியம் பெறுவோர் எவ்வித தாமதமும் இன்றி ஓய்வூதிய கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வர் எனவும் பிரதேச செயலகங்களில் பணியாற்றுவோர் ஜூலை 08 ஆம், 09 ஆம் திகதிகளில் தமது கடமையை நிறைவேற்றாததால் சுமார் 13,000 பேர் மாத்திரம் ஜூலை 11 ஆம் திகதி ஓய்வூதிய கொடுப்பனவை பெறுவர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .