Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2020 மார்ச் 15 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன அச்சம் காரணமாக, நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கோரிக்கை விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கோட்டையில் அமைந்துள்ள அலுவலகத்தில், இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் இலங்கை மக்களையும் பாதித்துள்ள நிலையில், இராணுவம், வைத்தியர்களைத் தவிர, அரசாங்கம் என்ற ரீதியில், தற்போதுள்ள அரசாங்கம் என்ன செய்தது என்றும் அவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.
இராணுவம் என்ற ஒன்று இல்லை என்றால், அரசாங்கம் என்ன செய்திருக்கும் என்று வினவிய அவர், பாடசாலை மூடுதல், அலுவலகங்களை மூடுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னால், கட்டுநாயக்க விமான நிலைத்தை முற்றுகையிட்டிருந்தால், இப்போது இந்நிலை நாட்டுக்கு ஏற்பட்டிருக்காது என்றும் அவர் கூறினார்.
பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு நாம் பயந்தவர்கள் அல்லர் என்றும் ஆனால், மக்களின் உயிருக்கும் எம்முடைய உயிருக்கும் நாம் பயந்தவர்கள் என்றும் இவ்வாறான நிலையில், பொதுத் தேர்தல் ஒன்றை அவசரமாக நடத்தவேண்டிய அவசியம் கிடையாது என்றும் அவர் கூறினார்.
பொதுத் தேர்தலை ஒத்திவைத்தால், பொதுமக்களுக்கு தற்போதுள்ள அரசாங்கத்தின் உண்மை நிலை தெரிந்துவிடும் என்பதாலேயே, அதை ஒத்திவைக்க மறுப்பு தெரிவிப்பதாகக் கூறிய அவர், விடுமுறைகளை மாத்திரம் வழங்கி, இந்தத் தாக்கத்தை அரசாங்கம் எவ்வாறு குறைக்கத் திட்டமிட்டுள்ளது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால், இந்த அரசாங்கத்தைக் கொண்டு செல்ல முடியும் என்று நினைத்தாலும் அதை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, தேர்தலை பிற்போடும் எண்ணமில்லை என்று, சுகாதார அமைச்சர் பவித்ர வண்ணியாராச்சி கூறியதைக் குறிப்பிட்ட அவர், கொரேனா தொற்றுக்கு உள்ளான சீனப் பெண்ணைத் தழுவி முத்தம் கொடுத்ததை விடுத்து, இங்கு இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள 10 பேரையும் எவ்வாறு தழுவி முத்தம் கொடுப்பது என்பது பற்றி எண்ணுமாறும் அவர் தெரிவித்தார்.
19 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
54 minute ago