2021 ஜூன் 24, வியாழக்கிழமை

ரணில் விக்கிரமசிங்ஹவை பதவி விலகுமாறு கோரிக்கை

Super User   / 2010 ஏப்ரல் 21 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவை கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என  ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய சட்டத்தரணிகள்  சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது.

அந்தப் பதவிக்கு சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட வேண்டும் எனவும்  ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய சட்டத்தரணிகள்  சங்கம் தெரிவித்தது.

தேர்தல் தோல்விகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று இடம்பெற்ற கூட்டத்திலேயே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி ரணில் விக்ரமசிங்ஹவின் பங்களிப்புடன் மற்றுமொரு கூட்டத்தை நடத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய சட்டத்தரணிகள்  சங்கம்   தீர்மானித்துள்ளது.


  Comments - 0

 • xlntgson Wednesday, 21 April 2010 10:03 PM

  வங்கியாளர்கள் எனும் கடன் பொருளாதார நிபுணர்கள் என்னும் எப்போதும் மோசமான எதிர்வு கூறுகின்றவர்களும் தேவை ரணிலுக்கு, இல்லாமல் இரண்டு பக்கமும் பேசும் வழக்குரைஞர்கள் எதற்கு அவருக்கு?

  Reply : 0       0

  thaaz Wednesday, 21 April 2010 11:22 PM

  இது ஒரு வரவேட்ககூடிய விடயம் நிச்சயம் இந்த மாற்றம் தேர்தலுக்கு முன்க்கூட்டியே செய்யப்பட்டிருக்க வேண்டிய விடயம்,

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .