2021 ஜூன் 21, திங்கட்கிழமை

சுகவீனமடைந்த யாழ் சிறைக்கைதிகள் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Super User   / 2010 ஜனவரி 10 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாநாட்டில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவந்த சிறைக்கைதிகள் நால்வர் சுகவீனமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கும் சிறைக்கைதிகள் 12 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக சிறைச்சாலை ஆணையாளர் மேயர் ஜெனரல் வி.ஆர்.சில்வா டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.

பொதுமன்னிப்பின் கீழ்  விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது பிணையில் செல்ல அனுமதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 7ஆம் திகதி முதல் இவர்கள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .