2021 ஜூன் 16, புதன்கிழமை

சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு புத்தளம் நீதிமன்றம் தடை

Super User   / 2010 ஜனவரி 20 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் பகுதியில் இன்று நடைபெறவிருந்த ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு புத்தளம் மஜிஸ்திரேட் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

புத்தளம் பொலிஸார் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட புத்தளம் மஜிஸ்திரேட் நீதிமன்றம் இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தது.

கடந்த 16ஆம் திகதி கொல்லப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர் சமன் குமாரவின் இறுதிக் கிரியை இன்று நடைபெறவிருக்கிறது.

ஒரே தினத்தில் இந்த இரு நிகழ்வுகளும் நடைபெறவிருப்பதால் வன்முறைகள்  ஏற்படலாமெனவும் பொலிஸார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னர்  ஏதாவதொரு தினத்தில் நடத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .