Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2012 ஜனவரி 07 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானிய கலைஞர் ஒருவர் வீட்டு அறை முழுவதையும் பல்வேறு வர்ணங்கள் கொண்ட ஸ்டிக்கர்களால் அலங்காரம் செய்து பார்ப்போரை வியக்கவைத்துள்ளார்.
உலகிலேயே அதிக ஸ்டிக்கர்களால் வடிவமைக்கப்பட்ட அறையாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வெள்ளை நிறம் பூசப்பட்ட சுவர்களில் மட்டும் வடிவமைக்கப்பட்ட இந்த அறையில், பல நிறங்களிலான ஆயிரக்கணக்கான ஸ்டிக்கர்ஸ்களை ஒட்டி அலங்கரிக்கும் காட்சியானது பலரின் பார்வையை ஈர்த்துள்ளது. குறிப்பாக சிறார்களை மிகவும் ஈர்க்கும் விதமாக இது உள்ளது.
82 வயதான யாயோய் குசாமா என்பவரே இந்த ஸ்டிக்கர் அலங்காரத்தை செய்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நடைபெறும் நவீன கலை கண்காட்சியின் ஒருபகுதியாக இந்த அறை நிர்மாணிக்கப்பபட்டுள்ளது.
1950 களிலிருந்து பல்வேறு வகையான கலைச்சிற்பங்களை குசாமா உருவாக்கி பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
21 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
37 minute ago