Super User / 2012 ஜூலை 09 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவசுப்பிரமணியம் சிவகாமி அல்லது தமிழினி - வெலிக்கடையிலுள்ள கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து வவுனியா பூந்தோட்டத்திலுள்ள பாதுகாப்பு தங்கல் மற்றும் புனர்வாழ்வு நிலையத்திற்கு ஜூன் 26ஆம் திகதி மாற்றப்பட்டார். தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் பெண் அரசியல் பிரிவு பொறுப்பாளரான இவர், ஜூன் 22ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிபதி ரஷ்மி சிங்கப்புலியின் கட்டளைப்படியே மாற்றப்பட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பூநகரி இராணுவத்திடமிருந்து ரி – 55 யுத்த டாங்கி ஓன்றை கைப்பற்றியது. அப்போது கைப்பற்றப்பட்ட தளபாடங்களை கடத்திக்கொண்டு செல்லும் அணியில் தமிழினி கடமையிலிருந்தார். கைப்பற்றப்பட்ட ரி- 55 டாங்கியை விரைந்து கடத்துவதற்கான பாதையொன்றை காட்டுப் பிரதேசத்திற்கு ஊடாக அவர்கள் அமைக்க வேண்டியிருந்தது.
ஆனால், மிகவும் பிரபலமான தமிழினி, முகாமிலிருந்தவர்களினால் விரைவில் இனங்காணப்பட்டார். அதிகாரிகளுக்கு ரகசிய தகவலும் வழங்கப்பட்டது. தமிழினி 2009 மே 27ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இவர் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பொலிஸ் புலனாய்வு பிரிவினராலும் தேசிய மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினராலும் விசாரிக்கப்பட்டார்.8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago