A.P.Mathan / 2014 மார்ச் 18 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத் தேர்தல் களம் தமிழகத்தில் அனல் பறக்கிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அனைவருக்கும் முன்னதாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு விட்டார். இவர் காஞ்சிபுரத்திலிருந்து பிரசாரத்தைத் தொடங்கினா். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அடுத்துப் பிரசாரத்தைத் தொடங்கினார். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தன் பிரசாரத்தை ஆரம்பித்தார். பாரதீய ஜனதாக் கூட்டணியில் அங்கம் பெற்றிருக்கும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், சென்னையிலிருந்து வழக்கமாக தன் பிரசாரத்தை மேற்கொண்டார். ஆனால் தி.மு.க.வின் பிரசார ஹீரோவும், மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்னும் பிரசாரத்தைத் தொடங்கவில்லை. உடல்நிலை காரணமாக அவர் ஏதாவது ஒரு வழியில் பிரசாரத்தைத் தொடங்குவேன் என்று கூறியிருந்தாலும், தி.மு.க.வின் தேர்தல் பிரசாரம் அவர் களத்திற்கு வரும் போது மேலும் களை கட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago