A.P.Mathan / 2014 ஜூன் 17 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
"தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்த்தப்படும்' என்று தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். 1949ல் துவங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை புத்துயிரூட்ட 2014இல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு கமிட்டி அமைப்பது, கருத்துக்களைப் பெறுவது என்பது அக்கட்சியில் வழக்கமான ஒன்று என்றாலும், இந்த முறை நடைபெற்ற ஆத்ம பரிசோதனை சற்று வித்தியாசமானது. கட்சி தோல்வி பெறும் நேரங்களில் கூட ஜெயித்துக் கொண்டிருந்த கலசப்பாக்கம் பெ.சு.திருவேங்கடம் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது. ஆறு ஏழு தினங்களுக்குள்ளாகவே அது அறிக்கையையும் கொடுத்தது. அதனடிப்படையில் இப்போது முதல் கட்டமாக தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளன. 65 மாவட்டச் செயலாளர்கள் இனி தி.மு.க.விற்கு இருக்கப் போகிறார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு கிடைத்த தோல்விக்கு கட்சிக்குள் எடுக்கப்பட்டுள்ள முதல் கட்ட சீர்திருத்த நடவடிக்கை இது.30 minute ago
47 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
47 minute ago
57 minute ago
1 hours ago