Mayu / 2024 பெப்ரவரி 07 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டிலிருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் இன்றையதினம் (07) ஒன்றாம் மணல் தீடையில் தஞ்சமடைந்துள்ளதாக மெரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எஸ்.ஆர்.லெம்பேட்

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
வவுனியா நெடுங்குழி பகுதியை சேர்ந்த நந்தகுமார் அவரது மனைவி மற்றும் அவரது 3 குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் செவ்வாய்க்கிழமை (06) மன்னாரில் இருந்து ரூ.1.50இலட்சம் கொடுத்து படகில் புறப்பட்டு இன்று (7) அதிகாலை இராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் கடற்கரையில் சென்றடைந்துள்ளனர்.

தகவலறிந்த இராமேஸ்வரம் மெரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மெரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை, பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 293 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
7 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago