George / 2016 நவம்பர் 30 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 28ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவைச் சிகிச்சையின்போது ஏற்றப்பட்ட ஊசி காரணமாக நால்வர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து அடையாளம் காணப்பட்ட ஊசி மருந்தை ஏற்றுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் புதன்கிழமை இடம்பெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
இந்த சாய வகை ஊசி மருந்து தொடர்பில், தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சாய வகை ஊசிமருந்து, தேசிய வட கொழும்பு, வைத்தியசாலை, யாழ்ப்பாணம், கராப்பிட்டிய, பதுளை, களுத்துறை, குருநாகல் ஆகிய பிரதேச வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
29 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
5 hours ago
9 hours ago