Editorial / 2026 மார்ச் 03 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

"அன்று ஜனாதிபதிக்கு இருந்த அந்தத் தீவிரமான கொள்கைப் பிடிப்பை அமெரிக்காவின் முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் நாட்டை விட்டுச் செல்லும் போது அவரோடு சென்றுவிட்டதா என்று தெரியவில்லை" என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
"ஈரானை முழுமையாக அழிப்பதற்கும், மத்திய கிழக்கில் தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டவும் டிரம்ப் நிர்வாகமும் இஸ்ரேலிய நிர்வாகமும் இணைந்து செயற்பட்டு வருகின்றன. அவர்கள் ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளனர்.
இதனால் இன்று உலகம் முழுவதும் அச்சமடைந்துள்ளது. ஒரு நாடாக இது எமக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எமது நாட்டைச் சேர்ந்த சுமார் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் மத்திய கிழக்கில் பணிபுரிகின்றனர். அத்துடன் எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன."
"இலங்கையின் வெளியுறவுக் கொள்கை என்னவென்று உலகம் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தவறு என்று ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வந்து அறிவிப்பார் என்று நாம் நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
அன்று ஜனாதிபதிக்கு இருந்த அந்தத் தீவிரமான அரசியல் நிலைப்பாடு இன்று எங்கே போனது? அந்த வீரியத்தை ஜூலி சாங் போகும்போது தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டாரா என்று தெரியவில்லை" என முஜிபூர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .