2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

அமைச்சர் கயந்தவுக்கு ஜே.வி.பி நற்சான்றிதழ்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இருக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டவர் என்று, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.  

எல்பிட்டிய எல்ல ஸ்ரீ ராஜாகீஷேக்காராமய விஹாரையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

“எமது நாடாளுமன்றத்தில், உண்மையாகவும் நேர்மையாகவும் கருத்துக்களைத் தெரிவித்து, மனசாட்சியுடன் வாழக்கூடிய இரண்டொரு நாடாளுமன்ற உறுப்பினர்களே இருக்கின்றனர். அவர்களில் மிகவும் முக்கியமான பெருமைக்குரியவர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆவார்” என்றார். 

விஷேடமாக காலி மாவட்ட மக்களுக்கு அது பெரும் கௌரவமாகும். தான் வாக்களிக்கும் ஒருவரின் பழக்க வழக்கங்கள், குணநலன்கள் நன்றாக இருக்குமாயின் அது வாக்களித்த மக்களுக்கே நல்லதாகும்.  

என்னுடைய நாடாளுமன்ற வரலாற்றிலேயே, இவ்வாறான நபர்களை கண்டது அரிதானதாகும். அவ்வாறு அரிதானவர்களில் அமைச்சர் கயந்த கருணாதிலக்கவும் ஒருவராவார். அவருக்கு வாக்களித்த மக்களுக்கே அது கௌரவமாகும் என்றும் சுனில் ஹந்துதெத்தி எம்.பி தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X