Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், நாளை (08) காலை 8 மணிவரை, அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளனர்.
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பைச் சேர்ந்த 50 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி, விமானப்படை முகாமுக்கு முன்னால் மேற்கொண்டு வருகின்ற போராட்டம், 8ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது.
வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, இன்றைய தினம், அம்மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது அம்மக்கள், “8ஆவது நாளாக தொடரும் போராட்டத்துக்கு, அரசாங்கம் எவ்விதப் பதில்களையும் தரவில்லை. இதனையடுத்து நாளை காலை 8 மணிவரை அரசாங்கத்துக்குக் கால அவகாசம் வழங்குகின்றோம். அதற்குள் உரிய பதிலை அரசாங்கம் வழங்காவிடின், போராட்டத்தின் வடிவம் மாற்றம் பெறும். ஆனால் போராட்டம் கைவிடப்படமாட்டாது” எனத் தெரிவித்தனர்.
12 minute ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
6 hours ago
7 hours ago