Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 15 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஷிவானி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசமைப்புக்கு அமையவும் சட்டப்பூர்வமாகவுமே முன்னாள் பிரதமரைப் பதவியிலிருந்து நீக்கி, புதிய பிரதமரை நியமித்தாரென, அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (14) இடம்பெற்ற போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், பிரதமர் பதவி நீக்கம், மற்றும் நியமனம் ஆகியன தொடர்பில், ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட இரண்டு வர்த்தமானிகளும், இதுவரை எவராலும் சவாலுக்கு உட்படுத்தவில்லையெனக் குறிப்பிட்ட அமைச்சர் சமரசிங்க, நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்தல் குறித்த அறிப்பு வெளியிடப்பட்டமையை எதிர்த்தே, உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன என்றும் கூறினார்.
“ஜனாதிபதி, நாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கே, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. எதிர்வரும் டிசெம்பர் மாதம் 5, 6, 7ஆம் திகதிகளில், குறித்த மனுக்கள் மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதன் பின்னர், டிசெம்பர் மாதம் 9ஆம் திகதியன்று, தீர்ப்பு வெளியாகும்” என்றார்.
“ஜனாதிபதியின் தீர்மானத்தை நாடாளுமன்றில் சவாலுக்கு உட்படுத்த முடியாது. பிரதமர் ஒருவருக்கு எதிராகவோ அல்லது எம்.பி ஒருவருக்கு எதிராகவோ, நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றைக் கொண்டுவருவது எவ்வாறு என்பது தொடர்பான விளக்கம், நிலையியற் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நாடாளுமன்றச் செயற்பாடுகள், இன்று (நேற்று 14) அவ்வாறு அமைந்திருக்கவில்லை” என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
“நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய, ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதந்து உரை நிகழ்த்தியிருக்க வேண்டுமல்லவா, ஏன் அவர் சபை அமர்வில் பங்கேற்கவில்லை?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், சபைக்கு ஜனாதிபதி வர வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் ஜனாதியின் அறிக்கையே இங்கு முக்கியமானதென்றும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
3 hours ago