2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஆடம்பர சிறைசாலை வியாழன் திறக்கப்படும்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலை சிறைச்சாலைக்குப் பதிலாக, ஹம்பாந்தோட்டை அங்னுகுகொலபெலஸ்ஸவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வசதிகளை கொண்டுள்ள ஆடம்பர சிறைச்சாலை, எதிர்வரும் 16ஆம் திகதியன்று திறந்துவைக்கப்படவுள்ளது.  

இந்த சிறைச்சாலையை சிறிசேனவே திறந்துவைக்க உள்ளதாக அறியமுடிகின்றது.  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தின் போது,

 சுமார் 40 ஏக்கர் விசாலமான நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட இந்த சிறைச்சாலைத் தொகுதியின் நிர்மாணப்பணிகளுக்காக 4,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சிறையில் மட்டும் 1,500க்கு மேற்பட்ட கைதிகளைத் தடுத்துவைக்கலாம்.  

சர்வதேச தரம் மற்றும் மனித உரிமைகளை மதிக்கும் வகையில், இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சிறைச்சாலை இதுவாகும். இந்த சிறைச்சாலைக்குள் நீச்சல் தடாகம், முழுமையான விளையாட்டு ஆய்வரங்கம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியனவும் உள்ளன.  

தமிழீழ விடுதலைப் புலிகள், 2009ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், கடந்த அரசாங்கத்தினால் பல்வேறான சொகுசு மாளிகைகள் கட்டப்பட்டன. அதிலொன்றாகவே இது அமைந்துள்ளது என்று சமூக வலைதளங்களில், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.  

இந்த சிறைச்சாலையின் நிர்மாணப்பணிகள், 2014ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X