Freelancer / 2025 செப்டெம்பர் 18 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆந்திராவில் கார் மீது லொறி மோதி விபத்துக்குள்ளானதில், சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், நெல்லூர் குர்ரம்வாரி வீதியை சேர்ந்த பால வெங்கைய்யா (வயது 40) என்பவரின் குடும்பத்தினர் கடப்பா மாவட்டம், ஆத்மகூர் எனும் ஊரில் உறவினர் ஒருவரின் குடும்பத்தாரை துக்கம் விசாரிக்க காரில் நேற்று (17) காலை புறப்பட்டனர்.
அப்போது, நெல்லூர் மாவட்டம், சங்கம் அருகே வெரமன் எனும் எனும் இடத்தில், மும்பை தேசிய நெடுஞ்சாலையில், வீதியின் எதிரே அதிவேகமாக தவறான பாதையில் வந்த டிப்பர் லொறி, இவர்களின் கார் மீது வேகமாக மோதியது. இதில் கார் டிப்பர் லொறியின் அடியில் சிக்கி கொண்டது.
இந்த கோர விபத்தில், காரில் பயணம் செய்த பால வெங்கைய்யா (வயது 40), இவரது மனைவி ராதா (வயது 38), இவரின் சகோதரர் நிவாசுலு (வயது 42), நிவாசுலுவின் மனைவி லட்சுமி (வயது 40), உறவினர் ஷேரம்மா (வயது 42), ஓட்டுனர் தெல்ல குண்ட்ல நிவாசுலு (வயது 48) மற்றும் 4 வயது சிறுவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
டிப்பர் லொறி ஓட்டுனரின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. (a)

19 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
55 minute ago
1 hours ago