Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
R.Maheshwary / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இணையத்தளம் ஊடாக பரப்பப்படும் தவறான போலி தகவல்கள் மற்றும் திசை திருப்புவதுமான சிறு தகவல்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதென தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, நீதியமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் ஆகியோர் கூட்டாக முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதென்றார்.
இன்று (20) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அமைச்சர்,
இணையத்தளம் ஊடாக பரப்பப்புடும் தவறான தகவல்களால் பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்படுவதாகவும் இது சமூகத்தை பிளவுப்படுத்தவும் ஜனநாயக நிறுவனங்களைப் பலவீனப்படுத்தவும் வழி சமைப்பதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதென தெரிவித்த அவர், இதனால் சரியான செய்திகளை வழங்கும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதால், சிறந்த ஊடக கலாசாரத்தைப் பேணுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இதனைக் கருதலாம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
38 minute ago
49 minute ago
52 minute ago