2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

இந்தியா செல்ல முயன்ற 5 பேருக்கு விளக்கமறியல்

Freelancer   / 2022 செப்டெம்பர் 25 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் தாழ்வுபாடு கடல் பகுதி ஊடாக இந்தியாவிற்கு செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்ட 12 நபர்களில் 5 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட ,ஏனைய 7 சிறுவர்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் தாழ்வுபாடு கடற்பரப்பினூடாக சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற சிறுவர்கள் உட்பட 12 பேர் நேற்று கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 02 ஆண்களும் 03 பெண்களும் அடங்குகின்றனர்.

07 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். கைது செய்யப்பட்டவர்கள், வெடித்தலத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X