2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

இன்று முதல் காலநிலையில் மாற்றம்

Freelancer   / 2024 நவம்பர் 29 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக, நிலவும் சீரற்ற காலநிலை இன்று (29) முதல் படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 
 
திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் நாட்டின் கிழக்கு கடற்கரையை அண்மித்து வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி, மறு அறிவித்தல் நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தை அறிவுறுத்தியுள்ளது. 
 
இதேவேளை, வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X