Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 19 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பா.நிரோஸ்
இன்றைய நாடாளுமன்ற அமர்வைப் புறக்கணிக்க வேண்டும் என்றே கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ள கலாநிதி பந்துல குணவர்தன, எனினும் இக்கருத்து தனிப்பட்ட கருத்து எனவும், மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், இன்று (19) காலை நடைபெற உள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இதனை தெரிவித்ததோடு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகர் கருஜயசூரிய, அரசமைப்புக்கு முரணாக, நிறைவேற்றியிருப்பதாகவும், இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு சபாநாயகரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை இவ்வாறு நிறைவேற்றியதில்லை எனவும் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், அரசமைப்பு, நிலையியற் கட்டளைகள் அனைத்தும் மீறப்பட்டே, கடந்த மூன்று அமர்வுகளும் நடத்தப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி அறிவித்துள்ளார். அரசமைப்புக்குட்பட்டு, இப்பிரேரணை நிறைவேற்றப்படவில்லை என்பதை ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு எடுத்துரைக்கிறது எனவும் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி ஒன்றிணைந்து இவ்வாறு அரசமைப்பு முரணாக செயற்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago