Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தர பிரதேசத்தில் மீரட் நகரை சேர்ந்தவர் அமித் ஆர்யா. பணம் கொண்டு செல்லும் வேன் டிரைவராக ஆர்யா வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு பிஜ்னோர் நகரை சேர்ந்த ஜோதி என்ற இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.
அவருடன் பல நாட்களாக ஆர்யா சாட்டிங் செய்து வந்திருக்கிறார். ஒரு நாள் ஜோதியை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆர்யாவுக்கு ஆசை ஏற்பட்டது. அதற்கேற்ப, ஜோதியும் பிஜ்னோருக்கு வரும்படி ஆர்யாவிடம் கூறியிருக்கிறார். ஆனால், அதுவே விபரீதத்தில் போய் முடியும் என அப்போது அவருக்கு தெரியவில்லை.
கடந்த ஜூலை 11-ந்தேதி வேலைக்கு போனவர் அரை நாள் அவசர விடுப்பு வேண்டும் என கேட்டு வெளியே வந்திருக்கிறார். அன்றைய தினம் இரவு அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால், அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர். 2 நாட்களாக தேடியும் அவர் காணவில்லை.
இதனால் பயந்து போன குடும்பத்தினர் ஜூலை 13-ல் போலீசில் புகார் அளித்தனர். 39 நாட்களாகியும் அவரின் இருப்பிடம் பற்றி தெரிய வரவில்லை. இந்நிலையில், வீடியோ ஒன்று வைரலானது. அதில், இளம்பெண் ஒருவர் துப்பட்டாவால் முகம் முழுவதும் மூடியபடி காணப்படுகிறார். பேண்ட், சட்டை அணிந்த அவர், ஆர்யாவின் கழுத்து பகுதியில் பூட்ஸ் அணிந்த காலால் மிதித்தபடியும், ஆர்யாவை கம்பு ஒன்றால் தாக்கும் காட்சிகளும் அதில் உள்ளன.
அந்த பெண்ணுடன் வேறு சில ஆண்களும் பெல்ட், கம்பால் ஆர்யாவை தாக்கியும், மிதிக்கவும் செய்கின்றனர். இந்த சம்பவத்தில் ஜோதி மற்றும் அவருடைய 2 நண்பர்களான சச்சின் மற்றும் சோட்டு ஆகியோரை போலீசார் கடந்த ஜூலை 26-ந்தேதி கைது செய்தனர். அவர்கள் மீதும், வேறு 4 பேர் மீதும் ஆர்யாவின் உறவினரான அனுராக் என்பவர் புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த தாக்குதலின்போது, ஆர்யாவை கடுமையாக தாக்கியும், அவரின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தியும் கொடுமை செய்துள்ளனர். எனினும், அவரை தாக்கியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆர்யா கிடைத்த பின்னரே முழு விவரமும் தெரிய வரும். ஆர்யாவை பாதுகாப்பாக மீட்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago