Freelancer / 2021 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனாவுக்கு எதிரான ஃபைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான முழு அதிகாரமும் இராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை இல்லாமல் வெளி நபர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்கப்பட்ட சம்பவங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தடுப்பூசி பெற்ற நபர்களின் விவரங்கள் வேண்டுமென்றே ஆவணங்களில் சேர்க்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இனிமேல், ஃபைசர் தடுப்பூசி இராணுவத்தின் அனுசரணையுடன் மக்களுக்கு வழங்கப்படும் என்றும், முறையான நடைமுறைக்கு வெளியே தடுப்பூசி பெற தகுதியற்ற எந்த நபருக்கும் வழங்கப்படமாட்டாது என்றும் இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
சிலாபத்தில் உள்ள கொக்காவில தடுப்பூசி மையத்தில் சுகாதார அதிகாரிகளின் தலைமையில் ஃபைசர் தடுப்பூசி வெளியாட்களுக்கு வழங்கப்பட்டமை அண்மையில் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
10 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
2 hours ago
3 hours ago