2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

இறுதியாக அறிவிக்கப்பட்ட மரணங்கள் விவரம்

J.A. George   / 2021 மே 17 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்று (16) அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் பதிவான மரணங்களின் மொத்த எண்ணிக்கை 962 ஆக உயர்வடைந்துள்ளது.

இறுதியாக 16 ஆண்களும் , 5 பெண்களும் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளை, கெலிஒயா, யாழ்ப்பாணம், இங்கிரிய, நேபொட, புளத்சிங்ஹல, இமதுவ, முருன்கஹமுல, அநுராதப்புரம். மொரட்டுவ மற்றும் மீரிகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், ஹாலி-எல, ஹந்தபான்கொட, ஹபராதுவ, எம்பிலிபிட்டி, நாகியாதெனிய, கடவத்த, மஹிய்யாவ, களுத்துறை தெற்கு, காலி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X