2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

Freelancer   / 2026 ஏப்ரல் 17 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

2026ஆம் ஆண்டிற்கான முதலாம் தர கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவிக்கையில்,

முதலாம் தர மாணவர்களின் இரண்டாம், மூன்றாம் தவணைகளுக்குரிய பயிற்சி நூல்களை (Activity Books) விநியோகிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்குள் அனைத்து பாடசாலைகளுக்கும் இந்த நூல்களை விநியோகித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் மாகாண ஆரம்பக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

மேலதிகமாக தேவைப்படும் பயிற்சிகளை மே 16ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யுமாறு மாகாணப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

முதலாம் தவணைக்குரிய பாடப்பரப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாத பாடசாலைகள் இருப்பின், அவற்றை இரண்டாம் தவணையில் நிறைவு செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிபர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த புதிய சீர்திருத்தங்கள் மூலம் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தவும், நவீன கல்வி முறையை அறிமுகப்படுத்தவும் அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .