Janu / 2025 ஜூன் 15 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பையை அடுத்த உல்லாஸ் நகர் கேம்ப் நம்பர்-4 பகுதியை சேர்ந்த அபிமன்யு தாய்டே (65 வயது) என்பவர் புற்றுநோய் காரணமாக மும்பை ஜே.ஜே. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட அவரின் உடல்நிலை சனிக்கிழமை (14) அன்று மோசமடைந்துள்ளது. உடனடியாக அவரது மகன் அவரை அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு முதியவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறி இறந்து விட்டதற்கான சான்றிதழும் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் முதியவரை வீட்டுக்கு கொண்டு வந்து இறுதி சடங்கிற்கான வேலைகளை தொடங்கிய நிலையில் முதியவரின் இதயம் துடிப்பதை குடும்பத்தினர் கவனித்துள்ளனர்.
உடனடியாக அவர்கள் முதியவரை உல்லாஸ் நகரில் உள்ள மற்றொரு தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளதுடன் அப்போது முதியவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. தற்போது அவர் குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையே மனிதநேய அடிப்படையில் தான் முதியவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கியதாக சம்பந்தப்பட்ட தனியார் வைத்தியசாலை வைத்தியர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "உயிருடன் இருந்தவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கியது தவறுதான். அவர் உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினர் கூறினர். எனவே மனிதநேய அடிப்படையில் தான் அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கினேன்" என கூறியுள்ளார்.
மேலும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 minute ago
28 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
28 minute ago
3 hours ago
4 hours ago