2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

‘இலகு வட்டிக்கு நுண்நிதி இலகு கடன்’

Editorial   / 2021 பெப்ரவரி 03 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

வடக்கு, வட மத்தி ஆகிய மாகாணங்களில் கடன் பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு சலுகை வழங்கும் வகையில் நுண்நிதி சுழற்சி முறை நிதி, இலகு வட்டிவீதத்தில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

கடன் உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் அதன்கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் அதிகபட்ச கடன்தொகையை 100,000 ரூபாய் வரை அதிகரிக்கவும் குறித்த கடன்களுக்கான வருடாந்த வட்டி வீதத்தை 9 சதவீதத்திலிருந்து 6 சதவீதம் வரை குறைக்கவும் அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


இதேவேளை, வட மாகாணத்துக்காக 292 மில்லியன்களும் வடமத்திய மாகாணத்துக்காக 250 மில்லியன்களும் அடங்கலாக 542 மில்லியன் நுண்நிதி இலகுக் கடன் திட்டம் மூலம் பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .