Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 18 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக் காரணமாக, சுற்றுலாத் துறை வீழ்ச்சியடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர சுற்றுலா தொழில் முயற்சி சங்கத்தின் தலைவர் ரொஹான் அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி, பெப்ரவரி மாதங்கள் இலங்கையின் சுற்றுலாத்துறை வர்த்தகம் அதிகரிக்கும் நிலையில், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை சுற்றுலா வர்த்தகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்தால், இலங்கையில் அமைதியான சூழல் ஒன்றை ஏற்படுத்துமாறும் சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லையெனில் கடந்த 5 வருடங்களாக மிகவும் சிரமத்தின் மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட சுற்றுலா வர்த்தகம் சிதைவடையும் என்றும், இதனை ஏனைய நாடுகள் பிரயோசனப்படுத்திக்கொள்ளும் என்றும் எனவே நாட்டில் நிலையான அரசியல் நிலையொன்று ஏற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago