2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

இலங்கை வருகின்றார் விசேட பிரதிநிதி

Freelancer   / 2022 செப்டெம்பர் 25 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரோமிலுள்ள ஐக்கிய நாடுகள் முகவரமைப்புகளுக்கான அமெரிக்க தூதுவர் சின்டி மெக்கெய்ன் இன்று இலங்கை வரவுள்ளார் என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை விடுத்து அறிவித்துள்ளது. 

எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் அவர் இலங்கையில் இருப்பார் எனவும் அறிவித்துள்ளது.

இலங்கையில் அமெரிக்காவினால் மேற்கொள்ளப்படும் உணவு உதவித் திட்டங்களை முன்னிலைப்படுத்துவதற்காகவும், இலங்கையின் நலன்கள் தொடர்பில் அமெரிக்க கொண்டுள்ள உறுதிப்பாடு மற்றும் இலங்கையுடனான நீடித்த பங்காண்மை ஆகியவற்றினை மீள் வலியுறுத்துவதற்காகவும் அவர் இலங்கை வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X