2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஈரானுக்கு விஜயம் செய்வார் ஜனாதிபதி

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நவம்பர் மாதம் ஆரம்பத்தில் அல்லது டிசெம்பர் மாதம் முதல் அரைவாசிக்குள், ஈரானுக்கு விஜயம் செய்யவிருக்கிறார் என்று, ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உலக நாட்டுத் தலைவர்கள் பலர், ஈரானுக்கு விஜயம் செய்யவிருப்பதாக, ஈரானின் மெஹர் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபாலவின் இந்த விஜயம் அமையவிருப்பதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவருடன், இந்தோனேஷியா, பின்லாந்து, பொஸ்னியா, ஹர்ஷகொவித்தா மற்றும் வெனிசூலா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளே ஈரானுக்கு விஜயம் செய்யவிருப்பதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X