Editorial / 2025 ஜூன் 24 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹோட்டல் அறையில் காதலர்கள் செய்த கவனக்குறைவால் ஜெய்ப்பூர் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், காதலர்கள் இருவர் பிரபல ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அறை எடுத்து தங்கிய காதலர்கள் சிறிது நேரம் பேசிவிட்டு ஜன்னல் திரையை மூட மறந்துவிட்டு அறையில் உல்லாசத்தில் ஈடுபட்டனர்.
அந்த ஹோட்டல் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்ற நபர், இதனை கவனித்து வீடியோ எடுத்து வெளியிட சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகியது.மேலும், அந்த மேம்பாலத்தின் வழியே வாகனங்களில் சென்றவர்கள், இதனை கவனித்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி சம்பந்தப்பட்ட ஹோட்டல் அறையை நோக்கி வேடிக்கை பார்க்க தொடங்கிவிட்டனர்.
இதனால் அந்த மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மேம்பாலம் திணறியது. ஆங்காங்கே வாகனங்கள் நகர முடியாமல் சிக்கி தவித்தது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அந்த அறையை தட்டி, ஜன்னலை மூட செய்ததோடு, அங்கு கூடியிருந்த மக்களையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஒருவழியாக போக்குவரத்து சீரானது.
காதலர்களின் தனிப்பட்ட செயல்களை சட்டவிரோதமாக வீடியோ எடுத்து வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக தளவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதேவேளையில், தனிப்பட்ட நேரங்களில் ஜன்னல் திரையை மூடாமல் கவனக்குறைவாக இருந்த காதலர்களை பலரும் கண்டித்து வருகின்றனர்.
5 minute ago
31 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
31 minute ago
3 hours ago
4 hours ago