2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு இதுவா காரணம்?

Nirosh   / 2022 செப்டெம்பர் 26 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டு மக்களுக்கு பயந்தே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயங்களை அமைத்துள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், உயர் பாதுகாப்பு வலயங்களைச் சேர்ந்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் அந்த வீதிகளில் இனி நடக்கவோ அல்லது வாகனங்களில் பயணிக்கவோ முடியாது என்றார்.

இந்த வீதிகளில் செல்வதாக இருந்தால் பொலிஸ்மா அதிபர் அல்லது மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அனுமதியை பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X