S.Renuka / 2026 பெப்ரவரி 18 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடியிருப்பு ஒன்றில் துர்நாற்றம் வீசுவதாக கடந்த ஜனவரி 13ஆம் திகதி பொலிஸாருக்கு புகார் வந்தது. சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று கதவை உடைத்துப் பார்த்தபோது, அங்கு 24 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பொலிஸார் விசாரணை நடத்தியபோது, அந்த வீடு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் துவாரகபுரி பகுதியைச் சேர்ந்த எம்பிஏ மாணவர் பியூஷ் தம்னோட்டியா என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த பியூஷை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து இந்தூர் பொலிஸ் துணை கமிஷனர் கிருஷ்ணாலால் சாந்தினி கூறியதாவது, பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட வீட்டின் அருகே கிடைத்த சிசிரிவி கேமரா பதிவுகளின் மூலம் அப்பெண்ணை பியூஷ் தனது வீட்டுக்கு அழைத்து வந்தது தெரியவந்தது.
அவரது தொலைபேசி எண்ணை வைத்து அவரை மகாராஷ்டிராவில் கைது செய்தோம். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3 நாள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரித்தோம். கடந்த ஜனவரி மாதம், அந்தப் பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து பியூஷ் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பியூஷ், பெண்ணின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து மும்பைக்கு அருகிலுள்ள பன்வலுக்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு ஹோட்டலில் இரவு தங்கி மாந்தீரிக சடங்குகளை செய்து அந்தப் பெண்ணின் ஆவியைத் திரும்ப அழைத்து பேச முயற்சித்துள்ளார். அந்தப் பெண்ணின் செல்போனையும் உடைத்து அழித்துவிட்டார்.
அந்தப் பெண் மற்ற ஆண்களுடன் பேசியதால் எழுந்த சந்தேகம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாகத் தெரிகிறது. கொலை நடந்த தினத்தில் உடலுறவுக்கு அந்தப் பெண்ணை அழைத்துள்ளார்.
ஆனால், அவர் மறுக்கவே, உனக்கு திடீர் பரிசு தருகிறேன் என்று பெண்ணின் கண்ணை கட்டிவிட்டு பின்னர் கொலை செய்துள்ளார். பின்னர் உயிரற்ற சடலத்துடன் அவர் உடலுறவு கொண்டதாகத் தெரிகிறது. இவ்வாறு கிருஷ்ணாலால் சாந்தினி தெரிவித்தார்.
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026