2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஊரடங்கு தொடர்பில் இன்று வெளியாகவுள்ள முக்கிய தீர்மானம்

J.A. George   / 2021 ஓகஸ்ட் 27 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று (27) அறிவிக்கப்படவுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று கூடவுள்ள கொவிட்19 ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, இது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் தரவுகளை ஆராய்ந்து, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றினால், எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X