2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

எஞ்சிய எலும்புகளையாவது தாருங்கள்; மனைவி கண்ணீர்

Freelancer   / 2021 டிசெம்பர் 06 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல் இன்று (06) நாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஶ்ரீலங்கன் ஏயார் லயின்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இன்று மாலை 5 மணிக்கு பூதவுடல் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, பூதவுடல் கம்பஹா − கனேமுல்ல பகுதியிலுள்ள அன்னாரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில், பிரியந்தவின் மனைவி நிலுஷி கருத்து தெரிவிக்கையில்,

இச்சம்பவத்தினால் தாம் மிகுந்த மனவேதனை அடைவதாக குறிப்பிட்டார்.

கணவனின் எஞ்சிய எலும்புகளையாவது பெற்றுக் கொண்டால், தனது அன்புக் கணவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் சந்தர்ப்பம் கிடைக்குமெனவும் அவர் குறிப்பிட்டார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .