Freelancer / 2022 மே 18 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 55 பேரையும், எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியதகேஸ்வரன், நேற்று (17) உத்தரவிட்டார்
சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்றும் சந்தேகத்தின் பேரில் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 69 பேர் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டனர்.
இதில் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் ஆகியோரது வழக்குகள், உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன் 5 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 7 பேருக்கு பிணை வழங்கப்பட்டது. ஏனைய 55 பேர், நாட்டிலுள்ள பொலன்னறுவை, அநுராதபுரம், கேகாலை, பதுளை மற்றும் திருகோணமலை போன்ற சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று (17) இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. நாட்டில் பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ளவர்களை, நாட்டின் சூழ்நிலை காரணமாக அழைத்துவரப்படாத நிலையில், மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிலரே பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டனர்.
42 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
14 Apr 2026