Editorial / 2019 செப்டெம்பர் 26 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் ஆரம்பமாகி இடம்பெறுகின்றது.
ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்வதற்கான முக்கிய கூட்டமாக இது அமைந்துள்ளது.
செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பிரேரிக்க உள்ளார்.
செயற்குழுக் கூட்டத்துக்கு முன்னதாக, கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுக்கு இடையில் இன்று முற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதன்போது, சஜித் பிரேமதாசாவின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பிரேரிக்க தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்பில் அதிகளவான ஆதரவாளர் கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் குவிந்துள்ளனர்.
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026