Freelancer / 2025 ஜூன் 01 , பி.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்தில் கலாசார உத்தியோகத்தராகப் பணிபுரிந்த நிலையில் அண்மையில் ஓமந்தையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரனின் மகனான அக்ஷய், மருத்துவ சிகிச்சை பலனின்றி இன்று (01) உயிரிழந்துள்ளார்.
ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த விபத்துத் துயரங்கள் அப்பகுதி மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.
அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்த்தில், பிரபாகரன் குருக்கள் உயிரிழந்த நிலையில், அக்க்ஷயும், அவரது தாயாரான சீதாலக்ஷ்மியும் (யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்) படுகாயமடைந்திருந்தனர்.
தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பயனளிக்காத நிலையில் அக்க்ஷய் இன்று (01) உயிரிழந்துள்ளார். (a)
27 minute ago
42 minute ago
48 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
42 minute ago
48 minute ago
54 minute ago