Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை புதன்கிழமை (15) முதல் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மேற்கொள்ளவிருந்த தொடர்ச்சியான வேலை நிறுத்தம், தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் வை.முபாறக், இன்று (14) தெரிவித்தார்.
கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடு, மாதாந்தக் கொடுப்பனவு, ஓய்வூதியம், விசேட கொடுப்பனவு, இடை நிறுத்தப்பட்ட மொழித் தேர்ச்சிக் கொடுப்பனவு உள்ளிட்ட 06 கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து பல்கலைக்கழக தொழிச்சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்திருந்தனர்.
உயர் கல்வி அமைச்சர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கமைய தொடர்ச்சியான வேலை நிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகவும் வை.முபாறக தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு எமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி, 2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட நிதியில் 460 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிதி மூலம் முதற்கட்டமாக கல்வி சாரா ஊழியர்களுக்கான 15 சதவீத விசேட கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஏனைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு திறைசேரியின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளமையினால் மிக விரைவில் நிறைவேற்றித் தரப்படுமென, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதையடுத்து இவ் வேலை நிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
48 minute ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
7 hours ago
7 hours ago