Freelancer / 2025 ஜூன் 07 , மு.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் நேற்று (06) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது அதிகாரிகள், ஜனாதிபதியிடம் விளக்கமளித்ததுடன், வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் அவற்றை செயல்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். (a)
3 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago