J.A. George / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பட்டிலேயே இருக்கும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்களின் கூட்டணியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.
அலரிமாளிகையில் இன்று(01) முற்பகல் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அரசாங்கத்தின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்கக் கூடாது என்ற கொள்கைகளுக்கமைய கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டிடமும் கையளிக்க மாட்டோம் என்று இதன்போது பிரதமர் கூறியுள்ளார்.
இதனுடன் தொடர்புடைய அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .