Editorial / 2025 டிசெம்பர் 17 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்
குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் அயினியாப்பிள்ளை முபாரக்கின் உத்தியோகபூர்வ அலுவலக அறை செவ்வாய்க்கிழமை (16) இரவு 7.00 மணிக்கு திருகோணமலை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரால்,கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் ஆலோசனைக்கு அமைய முத்திரையிட்டு(சீல் வைத்து) மூடப்பட்டுள்ளது.
லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதேச சபைத் தலைவர் செவ்வாய்க்கிழமை (16) பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் பிரதேச சபையின் இந்த வருட வரவு- செலவு திட்டத்தை முன்வைக்க சபைக்கு இன்று (17) வர உள்ளார்.இந்த சூழலில் வழக்கு விசாரணை முழுமையாக முடியவில்லை என்பதால் அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்திற்குள் அவர் செல்வதை தடுப்பதற்காக இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் பிரதேச சபைத் தலைவர் தமது கடமைகளை ஆற்ற தற்காலிகமாக வேறு ஒரு அறையை அவருக்கு வழங்கும்படி சபையின் செயலாளருக்கு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பணித்துள்ளார்.
6 minute ago
21 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
38 minute ago
46 minute ago