Editorial / 2021 ஜனவரி 08 , பி.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் மரணம், மொத்தம் 225 ஆக உயர்ந்தது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு-14ஐச் சேர்ந்த 75 வயதான ஆண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையில், ரம்புக்கனை மாவட்ட வைத்தியசாலையக்கு மாற்றப்பட்டார். அதன்பின்னர் தேசிய தொற்றுநோய்ப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் இன்று (08) மரணமானார்.
அவரது மரணத்துக்கு இரத்தம் நஞ்சானமை மற்றும் கொவிட் நிமோனியா ஆகியனவே காரணங்களாகும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆணொருவர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் அவர், நேற்றுமுன்தினம் (07) மரணமடைந்தார். அவரும் கொவிட் நிமோனியாவினால் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில், ஹொரனயை வசிப்பிடமாக்க கொண்ட 87 வயதான பெண்ணொருவரும் ஜனவரி 6ஆம் திகதியன்று மரணமடைந்தார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதை அடுத்தே அவர், மரணமடைந்துள்ளார் என்றும் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
54 minute ago