Editorial / 2025 மே 18 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டாஞ்சேனை புளுமெண்டலி ரயில்வேக்கு அருகில் புறாக்களை விற்பனைச் செய்யும் கடை நடத்தி வரும் 38 வயதான நபரொருவர் மீது ஞாயிற்றுக்கிழமை (18) மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு பாதுகாப்பு தலைக்கவசங்கள், கொட்டாஞ்சேனை மட்டி பூங்கா பகுதியில் இருந்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
8 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
11 Apr 2026
11 Apr 2026