2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கொழும்பு வடக்கில் புதிய போக்குவரத்துத் திட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 14 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகன நெரிசலுக்கான தீர்வாக, கொழும்பு வடக்கு -  முத்துவெல மாவத்தை, அளுத்மாவத்தை வீதியில், ஒரு வழிப் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு, கொழும்பு நகரப் போக்குவரத்து பொலிஸாரும் கொழும்பு மாநகர சபையினரும் இணைந்து, திட்டமொன்றை வகுத்துள்ளனர்.

இத்திட்டமானது, நாளை (15) காலை 8 மணியிலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள், இப்பாவத்த சந்தி, சென். அன்ரூ பிரதேசம், முத்துவெல மாவத்தை, முகத்துவார வீதி, ராசமுனகந்த வீதி, மட்டக்குளி மத்திய வீதி, புதிய நீர்கொழும்பு வீதி, கதிரான பாலம் ஊடாக எலகந்த திசைக்குப் பயணிக்கலாம்.

அதேபோல், கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள், கதிரான பாலம், மட்டக்குளி மத்திய வீதி, ராசமுனகந்த வீதி, அளுத்மாவத்த, இப்பாவத்த, ஹெட்டியாவத்த ஊடாகக் கொழும்புக்குள் நுழைய முடியுமென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .